Posts

Showing posts from 2022

நிகழ்ச்சி நிரல்

01-10-2022: 1.  10:30- 11 am : Tools/kinds of learning - Rajagopalan (Non fiction) 2. 11 to 1.30 :   Short Stories Reading             M. Gopalakrishnan with tea break 1.30 pm to 4 pm lunch break 3.  4 to 5 pm Classic and Modern  Literature Rajagopalan (extended) Tea break 5.  7  to 8 pm  Critical Reading Aneesh Nair ........... 02-10-2022: 6.  9:30- 10:30   Critical Reading Aneesh Nair  7. 10.30 - 11.30. Poetry reading    Mohanarangan/Bogan Tea break 8. 12.00 - 1.30 pm  Q & A, Sharing of the Learnings - Full Panel .....

அமர்வுகள்

1. எம் கோபாலகிருஷ்ணன்   வாசிப்புப் பயிற்சிக்கான சிறுகதைகள்   2. போகன் சங்கர்            கவிதைகள்     கட்டுரைகள் போகன் அமர்வு கட்டுரை 1: மௌனி கதைகள் - பிரமிள் முன்னுரை போகன் அமர்வு கட்டுரை 2: சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் - ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க . நா . சுப்ரமண்யம் போகன் அமர்வு கட்டுரை 3: ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை - சுந்தர ராமசாமி போகன் அமர்வு கட்டுரை 4: ஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன் போகன் அமர்வு கட்டுரை 5: ‘ எழுத்து ’ முதல் ‘ கொல்லிப்பாவை ’ வரை - ராஜமார்த்தாண்டன் போகன் அமர்வு கட்டுரை 6: ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும் – நகுலன் போகன் அமர்வு கட்டுரை 7: ஞானக்கூத்தன் நேர்காணல்   3. ராஜகோபாலன்   காவிய வாசிப்பு   ராஜகோபாலன் அமர்வு - நீலம் 20   ராஜகோபாலன் அமர்வு - நீலம் 21   ராஜகோபாலன் அமர்வு - நீலம் 22       4.  பா ...

ராஜகோபாலன் அமர்வு - நீலம் 22

Image
 https://venmurasu.in/neelam/chapter-22/ பகுதி   ஏழு** : 3.**  அதுவாதல் கொல்லும் குழல். கல்லைத் தொட்டெழுப்பி பெண்ணாக்கும் கழல். காரிரும்பின் உள்ளே கனிவெழுப்பும் தழல். காற்றாகி உருகி இசையாகிப் பெருகி நிறைந்திருக்கும் இருளே. குருதியுமிழ்ந்து இவ்வண்டப்பெருவெளியை ஈன்றிட்ட அருளே. என் ஐம்புலன்களும் குழவிகளாகி முட்டிமுட்டி மோதிப்புரளும் முலைகிளர்ந்த பன்றி. பசித்த வாய்திறந்து ஈன்ற மகவை மென்று நாசுழற்றும் சிம்மம். தின்று தின்று தானே எஞ்சி தன் வாலை தான் விழுங்கும் நாகம். நாகமணி நீலம். என் நெற்றிப்பொட்டில் விழுந்த எரிவிண்மீன். விண்ணிழிந்து மண் நிலைத்த ஒற்றை மழைநூல். குழலே, கொல்லும் குழலே. குழலாகி வந்ததுவே, எரிந்து எரிந்து இப்புவியை அழிக்கும் அழலே! அனலாகி கதிராகி தழலாகி கரியாகி ஒளியாகி வெம்மையாகி நின்றிருக்கும் இருளே. அழியாதெழுக நீ. அதிவிதுவென தீண்டி அனைத்தும் ஆளவென மூண்டு இங்கெழுந்து ஆடுக! ஸ்வாகா! சுவைதேடும் உன் ஒளி நாவுக்கு ஸ்வாகா! உன் அணையாப்பெரும் பசிக்கு ஸ்வாகா! நீ உண்ட அகிலங்களுக்கு ஸ்வாகா! நீ எழுந்த ஆயிரம் நெய்க்கடல்களுக்கு ஸ்வாகா! என் இருள்சுருண்டு நிறை திரண்டு பாறையென்றாயிற்...

ராஜகோபாலன் அமர்வு - நீலம் 21

Image
https://venmurasu.in/neelam/chapter-21/  பகுதி   ஏழு** : 2.**   அகம்   அழிதல் முத்தமிட்டு மீட்டும் இசைக்கருவியென பிறிதொன்றில்லை. சிறகிலெழுந்த இசையை விஷக்கொடுக்கிலும் உணர்ந்த முதற்கருவண்டு முத்தமிட்டு முத்தமிட்டு துளைத்து எழுந்த பொன்மூங்கில் அறிந்திருக்காது மூங்கில்குலமே அதன் வழியாக இசைகொள்வதை. தன்னுள் எழுந்த முதல் இசையைக்கேட்டு தானே திகைத்து காற்றோடி எழுந்த மூச்சு நிலைக்க அசைவழிந்திருக்கும். பின்னர் ஒவ்வொன்றையும் ஒலியாக்கி உணர்ந்திருக்கும். மண்ணிலூறிய உப்பை. நீர் பெருக்கை. இலைகளறியும் காற்றை. கிளைகள் வளைந்தாடும் நடனத்தை. ஒளிபெருகும் வானை. வான் நோக்கிய மலர்தலை. மலர்கொண்ட கனிதலை. கனிவூறிய விதையை. விதை கொண்ட அமைதியை. நள்ளிரவின் இருளில் கருநாகம் சுற்றி மேலேறும் தழுவலின் மென்மையை அது பாடியிருக்குமா என்ன? அதன் சிறுமுட்டைகள் கனக்கும் குழலகத்தை, விஷநாக்கு நீட்டி வளையும் ஆயிரம் கருநாகங்கள் அதில் எழுந்து தழுவி கீழே வழிவதை அந்தக் கருநாகம் கூட அறிந்திராது. மூங்கில் முத்தில் மணியொளிரும் விழி எழுந்தது எப்படி? நீர் நீண்ட நெளிவில் நஞ்செழுந்தது எப்படி? இசையாகி எழுகையில் வனமாகி நிறையல...